தமிழகத்தில் பயணிகளின் ரயில்களுக்கு முன்பதிவு சேவை இன்று முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது. ஏற்கனவே கூறியதுடன், கூடுதலாக தற்பொழுது 4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்கப்பட இருக்கின்றன. அதாவது சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க உள்ளன.
மேலும் செங்கோட்டை – சென்னை எழும்பூர் இடையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயிலும், இதேபோல் சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம், திருச்சி – நாகர்கோவில் ஆகிய நகரங்களிடையே தினந்தோறும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக வெப்பநிலை பரிசோதித்து பார்க்க பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும் என ரயில்வே துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.