பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மீன்சுருட்டி , ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாகவே பொதுமக்களிடம் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கியும், பல விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தின.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதற்க்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் விதமாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மீன்சுருட்டி,காடுவெட்டி,மேலணிக்குழி,ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் போலீசாரின் அணி வகுப்பு மக்களின் முன் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மத்திய ராணுவ படையினர், மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.