பிரதமர் மோடி தமிழ் மாணவியின் படிப்பிற்காக நான்கு வருடங்கள் கட்டணம் செலுத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பவித்திரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் ரக்ஷிதா 2014ஆம் வருடம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமையப்பெற்றுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் ரஷிதாவின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் குணசேகரன் மற்றும் ரக்ஷிதா பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதனை பார்த்த பிரதமர் மோடி மாணவியை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டுமென நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். பிரதமரின் உத்தரவை தொடர்ந்து ரக்ஷிதா பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில் பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் சிறுமி பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் குணசேகரன் மீண்டும் உதவி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது முதல் பிரதமர் மோடி ரசஷிதாவின் கல்வி கட்டணத்தை ஏற்ற தோடு ஒவ்வொரு வருடமும் சரியாக பள்ளி கட்டணத்தை செலுத்தி வருகின்றார். நான்கு வருடங்களாக மோடியின் உதவியால் படித்துவரும் ரக்ஷிதா நேரில் பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதோடு தன்னை போன்று இருக்கும் ஏழை மாணவர்களும் படிப்பதற்கு பிரதமர் மோடி அவர்கள் உதவி புரிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.