Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இது உங்கள் ராசிக்கு…!

 இன்றைய பஞ்சாங்கம்

06-09-2020, ஆவணி 21, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.07 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 05.23 வரை பின்பு பரணி.

சித்தயோகம் பின்இரவு 05.23 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

இன்றைய ராசிப்பலன் –  06.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திக்க ஆர்வம் கொள்வீர்கள். குழந்தைகளால் பெருமை கூடும். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வெளி பயணங்களாலும் அதிக அலைச்சலும் உண்டாகும். வாகனங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். சிக்கனமாக இருந்து கொள்ளுங்கள் அதுவே நல்லது. பெரியவர்களின் ஆலோசனையால் தொழிலில் புதிய மாற்றம் ஏற்படும். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். ஆடம்பர பொருட்களை வாங்க ஆர்வமாக இருப்பீர்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்குள்  வீன் மனஸ்தாபம் ஏற்படும். உடல் நலத்திற்காக சிறு தொகையை செலவிட கூடும். சேமிப்பு பணம் குறையும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பது சிரமம் ஏற்படும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தடையின்றி செய்ய கடின உழைப்பு போட வேண்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்க சிறிது தாமதம் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்லுங்கள். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டில் குழப்பமும் மன உளைச்சலும் அதிகமாக இருக்கும். மிக முக்கிய பேச்சுவார்த்தைகளை சிறிது நாள் கழித்து பேசுங்கள்.வெளியில் செல்லும்போது கவனமாக இருங்கள் வீண் பிரச்சனை உண்டாகக்கூடும். வெளியூர் செல்வதனால் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் வெற்றி கிட்டும். வீட்டில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி கூடும். குழந்தைகளின் விருப்பம் நிறைவேறும் நாள். ஆடம்பரம் பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் மறைமுகமான எதிர்ப்புகள் நீங்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். வீட்டிலிருந்த பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் அகலும். ஆடம்பர ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணம் செல்வதற்கு வாய்ப்பு கிட்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடும். உடன்பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் பிரச்சனைகள் வர வாய்ப்பு. எந்த செயல் செய்தாலும் தைரியத்துடன் செய்வீர்கள். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனையாகவும் அனுகூலம் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உடல்நலம் சீராக இருக்க வேண்டுமானால் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வீட்டு ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள்.தொழில்ரீதியான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுபகாரியங்கள் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடவுள் வழிபாட்டில் ஆர்வம் கூடும். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் உண்டாகும். அசையா சொத்துக்களில் அனுகூலம் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும் ஆனால் செலவும் அதிகரிக்கும். குழந்தைகளின் நடவடிக்கை சிறு வருத்தத்தை ஏற்படுத்தும். உத்தியோக ரீதியில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது வியாபாரத்தை அதிகரிக்கும்.

 

Categories

Tech |