துபாயில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள் உட்பட்ட ஐந்து ஆண்டுகள் புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படும் என துபாய் அரசு கூறியுள்ளது.
துபாயில் உள்ள மக்கள் தொகையில் 90% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் இருந்து வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்புவோர் மற்றும் பிற நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இதற்கு தீர்வு காணும் விதத்தில், வெளிநாட்டவர்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது.
அந்தத் திட்டத்தின்படி இந்திய மதிப்பில் 4 லட்சம் ரூபாய் மாத சம்பளம் உள்ளவர்கள், இரண்டு கோடி ரூபாய் சேமிப்பு தொகை வைத்துள்ளவர்கள் மற்றும் துபாயில் 4 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வைத்திருப்பவர்களுக்கும் புதுப்பிக்கத்தக்க விசா வழங்குவதற்கு துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.