சீனாவில் 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் பதவியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டனர். தற்போது சீனாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அது மட்டுமன்றி லட்சக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாணி அரசியல் சுத்திகரிப்பு அதிபர் கடந்த ஜூலை எட்டாம் தேதி மத்திய அரசியல் மற்றும் சட்ட ஆணையத்தின் கூட்டத்தின் போது ‘யான் திருத்தம் இயக்கம்’ என்பதை அறிவித்தார்.
யான் திருத்தம் பிரசாரம் என்பது 1942 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு தூய்மைப்படுத்தல் இயக்கமாக கருதப்படுகிறது. அந்த யான் திருத்தம் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான சீனக் கம்யூனிஸ்டுகள் அவரவர் கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்த தலைவர்கள் கம்யூனிஸ்ட் சீனாவின் தந்தை மாவோ சேதுங்கின் கொள்கைப்படி, ‘ தங்களது சிந்தனையை ஒன்றிணைக்க’ கட்டாயப்படுத்தப்பட்டனர். கட்சி மற்றும் மாவோயின் கொள்கையில் இருந்து எவரும் விலகிச் செல்லக் கூடாது, இல்லையென்றால் அவர்கள் வெளியேற்றம், சித்திரவதை மற்றும் மரணத்தைக் கூட எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் 13 லட்சம் அதிகாரிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் கடந்த மாதம் ஜியின் நெருங்கிய உதவியாளர் மற்றும் பொது பாதுகாப்பான மிக மூத்த துணை அமைச்சருமான வாவ் சியாஹோங் அரசியல் ஒழுக்கம் குறித்த கட்டுரையை வெளியிட்டார். ஜியின் ஆட்சியில் அரசியல் ஒடுக்குமுறை இது ஒன்றும் புதிதல்ல, ஏனென்றால் அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சிசிபி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதற்கு பின்னர் முக்கிய அரசியல் போட்டியாளர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
கொரோனா தாக்கம், பொருளாதாரத்தை சீர் குலைத்தல் மற்றும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இருக்கின்ற பிற நாடுகளுடன் அதிகரித்துக் கொண்டிருக்கும் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த 2018 ஆம் ஆண்டு கால வரம்புகளை ரத்து செய்த போதிலும், அதிகாரத்தில் இருக்க சீன அதிபர் மேற்கொண்ட புதிய முயற்சியாக இது கருதப்படுகிறது.