Categories
உலக செய்திகள்

குதித்து குதித்து முடிவெட்டும் சலூன்காரர்….வெளியான நகைச்சுவை வீடியோ…!!!

சலூன் கடைக்காரர் ஒருவர் முடிவெட்டி விட்டு வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதற்கு செய்யும் சாகசம் மிகுந்த நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பணியாற்றும் மக்கள் அனைவரும் தங்கள் வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு பல்வேறு வழிகளை கையாளுகின்றார்கள். இதற்கு மத்தியில் சலூன் கடைக்காரர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு சரியான தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு செய்யும் முடிதிருத்தும் அர்ப்பணிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல் மிகுந்த நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த சலூன் கடைக்காரர் தனது வாடிக்கையாளரின் முடியை வெட்டி விட்டு, அவர் வெட்டிய தோற்றத்தை சரி பார்ப்பதற்கு ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று குதித்து குதித்து பார்க்கிறார். அவரின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது. ஒருகட்டத்தில் அந்த சலூன் கடைக்காரர் கடையிலிருந்து வெளியே சென்று வாடிக்கையாளரை பார்வையிடுவது மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது.

இதற்கு முன்னதாக இந்த வீடியோ பதிவு தென் கரோலினாவை சேர்ந்த ஒருவரால் ஃபேஸ்புக் பக்கத்தில் அப்ஸ்கேல் கட்ஸான்ட்ஸ்டைலெசன் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்த வீடியோ பதிவை பிபி என்ற பிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவிற்கு ‘ இந்த நபரை போன்ற அதிகமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் எங்களுக்கு தேவை’ என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

https://twitter.com/rahm3sh/status/1301178440033460225

 

Categories

Tech |