பல்பை கண்டறிந்தவர் எடிசன் இல்லை, கருப்பு இனத்தை சேர்ந்தவர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதில் ஜோ பிடன் தற்போது பேசியுள்ள கருத்து பெரும் அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கிரேஸ் லுத்தரன் சர்ச்சில் பேசிய அவர், ” பல்பை கண்டறிந்தவர் கருப்பு இனத்தை சேர்ந்தவர். எடிசன் என்ற வெள்ளைக்காரர் பல்பை கண்டறியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஜோதிடன் குறிப்பிடுவது லூயிஸ் லாடிமர் என்ற கருப்பினத்தவர். அவர் பல்புகளை நீண்ட நேரம் எரிய வைக்கும் இழையை அவர் கண்டறிந்தார் என விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பின மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி மீது கருப்பின மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் பல்பு கண்டுபிடித்தவர் கருப்பு இனத்தை சேர்ந்தவர் என ஜோ பிடன் கூறியிருப்பதாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.