Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?… முதல் மந்திரி…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார்.

கேரளாவில் இன்று மட்டும் 2,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,759 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது வரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று 2,111 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 62,559 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21,800 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Categories

Tech |