ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணியின் 25 வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்ற ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருக்கின்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு 23 முதல் இருபத்தைந்து வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் செய்தது போன்று இந்த நடவடிக்கை சாத்தியம் வாய்ந்ததாக இருக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். அதற்காக தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலைமையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாட வீரர்கள் அக்டோபர் மாதம் இறுதி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்வார்கள். மற்ற வீரர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை முடித்துக் கொண்டு அதன் பின்னர் அணியில் இணைந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.