தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஓட்டேரி அடுத்த சூளைமேடு தெருவை சேர்ந்தவர்கள் காதர் மொய்தீன் ரேஷ்மா தம்பதியினர். இவர்களுக்கு நாசியா பாத்திமா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று நாசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அச்சமயம் அவர் அருகே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பேட்டி சரிந்து நாசியா மீது விழுந்துள்ளது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அலறிய அலறல் சத்தம் கேட்டு ரேஷ்மா ஓடி வந்துள்ளார்.
அங்கு குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு நாசியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.