மதுரையில் அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பணியாற்றி வீடு திரும்பிய செவிலியருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரைச் சேர்ந்த திருமதி மீனா, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சேவையாற்றி வந்த மீனா பணி முடிந்து இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் மீனாவுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மக்களின் இத்தகைய வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செவிலியர் மீனா தெரிவித்துள்ளார்.