இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா என்ற கேள்விக்கு உலகம் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சீனர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்ற மிகவும் வலுவாக செல்வதாக டிரம்ப் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் செய்ததை மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.