உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2.70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதிலும் கொரோனாவால் 8.82 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1.91 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் 64.29 லட்சம் பேர் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.