Categories
உலக செய்திகள்

7 மாதங்கள் கழித்து … மீண்டும் பள்ளி செல்லும் ஈரான் மாணவர்கள்…!!!

ஈரானில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. கிழக்கு மத்திய நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கின்றது. ஈரானில் கூமில் என்ற புனிதமான நகரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் வட பகுதியில் இருக்கின்ற சுற்றுலா நகரமான கிலான் நகரம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானின் எல்லைப் பகுதியில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. ஈரானின் தலைநகரில் 90 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அங்கு ஊரடங்கு தளர்த்தப் பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதால், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஈரானின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஈரானில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |