இன்றைய பஞ்சாங்கம்
07-09-2020, ஆவணி 22, திங்கட்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.39 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.
நாள் முழுவதும் பரணி நட்சத்திரம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
மஹா பரணி.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 07.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். பணவரவு சுபிட்சமாக இருக்கும். சுபகாரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பணியில் வேலை சுமை குறையும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு செய்யக் கூடும். சுபகாரியங்களில் மந்த நிலை உண்டாகலாம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் பொறுப்புடன் நடந்து கொண்டால் உங்கள் மதிப்பு உயரலாம். கடவுள் வழிபாடு பலனை கொடுக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்குவீட்டில் திடீரென்று தனவரவு உண்டாகும். புதிய பொருட்களை வாங்க மகிழ்வீர். உறவினர்கள் வருகையால் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் ஈடுபாட்டுடன் வேலை பார்ப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கக்கூடும். புதிய பொருட்களை வாங்க யோகம் உண்டாகும். வீட்டில் உள்ள பிரச்சனைகள் அகலும் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார். வியாபாரம் சிறப்பாக இருக்க கூடும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு காரியங்கள் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். தொழில் செய்பவர்களுக்கு உடல் சோர்வு மன உளைச்சல் உண்டாகும். உடனிருப்பவர்களின் நட்பு கூடும். வெளி பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதனால் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். கொடுத்த கடன் திரும்பி வர சற்று தாமதமாகும். எந்த செயல் செய்தாலும் நிதானத்துடன் செய்வது பலனை கொடுக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். வீட்டில் இருப்பவர்களிடம் ஒற்றுமை கூடும். கடன் பிரச்சனை அனைத்தும் குறைந்து மன நிம்மதி கொடுக்கும். திருமண காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் போட்டி பொறாமைகள் அனைத்தும் குறைய வாய்ப்பு.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு அமோகமான பலன்கள் அனைத்தும் கிட்டும். தொழில் வியாபார நிலை பெருகும். பணியில் தகுதிக்கேற்ப பணி கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்கள் கை கூடும்.
தனுசு
உங்கள் உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். வீட்டில் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரும். உத்தியோகத்தில் உள்ள மந்த நிலை மாறலாம். உடனே இருப்பவர்களிடம் பொறுமையாக செல்லவும். தெய்வ வழிபாடு பலனைக் கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பூர்வீகச் சொத்துகளால் இழுபறி நிலை உண்டாகும். வெளி பயணங்களால் தேவையற்ற மனக்குழப்பம் உடல் சோர்வு உண்டாகும். உற்றார் உறவினர்களால் பொருளாதார பிரச்சினை நீங்கும். எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுங்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்களே ஆதரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரியவர்களின் நட்பு உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு கடினமாக உழைக்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் லாபம் கிடைக்க இடையூறு இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி வர வாய்ப்புண்டு.