மேஷம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களின் ராசிக்கு சிறந்தப் பலன்களைக் கொடுக்கக்கூடிய நாளாகும்.
குடும்பத்தில் அமைதி தழுவும். பெண்களுக்கு இனிமையான நாள் இன்று. நீண்ட நாட்களாக தாமதப்பட்டுவந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் இன்று. புதிய வாய்ப்புகள் கைக்கூடிவரும். எதிர்பார்த்த பணவுதவிகள் கிடைக்கும். இடமாற்றம் போன்றவற்றை எதிர்நோக்கிருப்பவர்களுக்கு நல்லத்தகவல் கிடைக்கும். இன்று இந்த மாதிரியான வேலைகளை தாராளமாகத் தொடங்கலாம்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.