ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
சொத்து வாங்குவது மற்றும் விற்பதில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடைவதாக இருக்கும். பெண்களுக்கு உகந்த நாள் இன்று. மாணவர்களின் கல்விநிலை மேம்படும். நண்பர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். உடல்நலம் சீராக இருந்துவரும். மனதிற்குப் பிடித்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். சிறுசிறு ஊடல்கள் இருந்தாலும், பிற்பகலுக்குமேல் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.