தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து காலை முதல் தொடங்கியது.
தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வாக மாவட்டத்திற்குள் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் தளர்வு நடவடிக்கையாக இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பனிமலைகளில் ஆயத்த பணிகள் நடைபெற்றன. சென்னை கோயம்பேடு பணிமனையில் பேருந்துகளுக்கான வாட்டர் வாஷ், ஆயில் மாற்றுதல், காற்று நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர்.
சென்னையிலிருந்து வெளியூர் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை வருவதற்காக கோயம்பேட்டில் இணையதள முன்பதிவு செய்வதில் நடைபெற்ற நிலையில் பயணிகளின் தேவையை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.