Categories
உலக செய்திகள்

காரில் சென்ற போது துப்பாக்கி சூடு… “ரத்த வெள்ளத்தில் பலியான 3 வயது குழந்தை”… இரவில் நடந்த பயங்கரம்..!!

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் அதிக அளவு பெருகியுள்ளது. அதனால் துப்பாக்கி வினியோகம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அமெரிக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி கொண்டிருக்கிறது. அதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிக அளவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் லூசியானா மாகாணம் பேடன் ரூஜ் நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் எதிரே வந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சுடும் தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 வயது பச்சிளம் குழந்தை இப்ரி காம்ஸ் மீது துப்பாக்கி குண்டுகள் நுழைந்தன. அதில் அந்த பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர்கள் யார்? அதற்குப் பின்னணியில் என்ன உள்ளது? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு லூசியா மாகாணம் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” இன்று இரவு நடந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். இந்த சம்பவத்தால் என் இதயம் கனமானது. இந்தக் குழந்தையின் வாழ்க்கையை சமூகம் மதிக்க வேண்டும். இந்த சம்பவத்தை யார் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |