Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து திருட்டு… “அடித்து துரத்திய வட்ட செயலாளர்”… சரக்கு போட்டுவிட்டு 7 சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய நபர்கள்..!!

இருசக்கர வாகன திருட்டை தட்டிக் கேட்டதால் மது பிரியர்கள், ஏழு சரக்கு ஆட்டோக்களை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூளை சைடாமண்ஸ் ரோட்டில் உள்ள கண்ணப்பர் திடல் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 78 வது வார்டு வட்டச்செயலாளர் இருந்து கொண்டிருக்கிறார். அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியை சேர்ந்த சில நபர்களை செயலாளர் விஜயகுமார், ஏரியாவுக்கு வரக்கூடாது என்று கூறி அடித்து துரத்தி இருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த தாவூத் என்கிற அருண்குமார், மணி, ரிச்சர்ட் மற்றும் நந்து ஆகிய நபர்கள் மதுபோதையில் சூளை ரவுண்டானா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 சரக்கு ஆட்டோக்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.

அதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விஜயகுமார் பெரியமேடு காவல் துறையினரிடம் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் காவல்துறையினர் நந்து மற்றும் ரிச்சர்ட் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றனர். தலைமறைவாகியுள்ள தாவூத் மற்றும் மணி ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |