Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

2 மனைவி…. 4 பிள்ளைகள்….. சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்….. காஞ்சி அருகே பரபப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொத்துப் பிரச்சனை காரணமாக தனது தந்தையை இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் என்ற கிராமத்தில் 58 வயதுடைய ஜெயராமன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் பத்மாவதி என்ற இரண்டாவது மனைவியும் அவர் மூலமாக ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சினை நடந்துள்ளது.

ஜெயராமன் நேற்று முன்தினம் மாலை தன் முதல் மனைவி மகன்களுடன் அப்பகுதியில் இருக்கின்ற வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது சொத்து பிரச்சனை காரணமாக முதல் மனைவியின் மகன்கள் தனது கூட்டாளிகளுடன் இணைந்து பெற்ற தந்தை என்றும் கருதாமல் ஜெயராமனை கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராமனின் முதல் மனைவி கோவிந்தம்மாளின் 25 வயதுடைய விக்னேஷ் என்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படைகள் மூலமாக தந்தையை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள கூலிப்படையினர் மற்றும் கோவிந்தம்மாள் இரண்டாவது மகன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |