மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கின்ற விளாச்சேரி பசும்பொன் என்ற நபரின் தர்மர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 27 வயதுடைய கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கும் மேல் உரப்பனுர் சிவன்ராஜ் என்பவரின் 16 வயதுடைய மகளுக்கும் நேற்று விளாச்சேரி பகுதியில் திருமணம் நடந்துள்ளது. இதுபற்றி திருப்பரங்குன்றம் சமூகநலத்துறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் பஞ்சவர்ண என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மணமகள் கிருஷ்ணகுமார்(27), மணமகளின் தந்தை சிவன்ராஜ்(42), தாய் கவிதை(38), மணமகனின் தந்தை தர்மர்(58) மற்றும் தாய் கழுவாய்(52) ஆகிய 5 பேரையும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் திருமணமான சிறுமியை காவல் துறையினர் மீட்டு அரசு காப்பகத்தில் வைத்துள்ளனர்.