நானும் சிங்கிள் தான் என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களிடம் கூறியிள்ளார்
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கிரிக்பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.இதனால் தெலுங்கு திரைப்பட உலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். ராஷ்மிகா மந்தனாஅடுத்த படமாக புஷ்பா என்ற திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக,கார்த்தி நடித்துவரும் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
சமூக வலைதளங்களிளும் ராஷ்மிகா பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து,அவர்களுடன் அவ்வப்போது கலந்துரைகிறார் .சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் யாரை காதலிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த ராஷ்மிகா நானும் சிங்கிள் தான் எனக்கு சிங்கிள் தான் பிடித்திருக்கிறது.சிங்கிளாக இருப்பதை நினைத்து வருந்துபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் சிங்கிளாக இருப்பதை ரசிக்கத் தொடங்கி விட்டால் காதலருக்கான மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.