கொரோனவிற்கு பிறகு திருப்பதி கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்களில் கூடுவதற்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அவ்வகையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு திருப்பதி கோவிலில் முதல் முறையாக உண்டியல் மூலம் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு வார விடுமுறை நாளான நேற்று 13,486 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது