மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு இனிய நாளாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்லச் செய்தி வந்துச்சேரும். உடல்நலம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தந்தை வழிச்சொந்தங்கள் சற்று நெருங்கி வருவதற்கான காலமாகவும் இன்றைய நாள் அமையும். தனவரவு உண்டாகும். கோபத்தை விடுத்து குணத்தைப் பெருக்கிக் கொள்வது மனதை செம்மைப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.