மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் இனிமையாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றையநாள் கூடுதல் பணிச்சுமையைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக செயல்பட்டு நல்லப் பெயரை எடுப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் மற்றும் அலைச்சலும் உண்டாக வாய்ப்புள்ளது. உடல்நலம் சீராக இருந்துவரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்துச்சேரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு அற்புதமான நாளாக இன்றையநாள் இருக்கும். உயர் கல்வியை நோக்கி இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.