Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 40% பேர்… இதனை செய்யவில்லை… முதலமைச்சர்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவ்வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வினை முதலமைச்சர் மேற்கொண்டார். அதன் பின்னர் மாவட்டத்தில் 12 புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.51.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ” திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது வழியில் 40 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதை பார்த்தேன். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. மேலும் விவசாயிகளை உள்ளடக்கிய குடிமராத்து பணிகள் செயல்பட்டு வருகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |