Categories
தேசிய செய்திகள்

 டெல்லியில் புதிதாக 2,007 பேருக்கு கொரோனா பாதிப்பு… மக்கள் அச்சம்…!!!

டெல்லியில் இன்று மட்டும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்

டெல்லியில் முதலில் அதிகரித்துக் கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” டெல்லியில் இன்று மட்டும் 2077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,93,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,599 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று மட்டும் 2,411 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,68,384 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,543 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதார துறை கூறியுள்ளது.

Categories

Tech |