Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இல்லமா வந்தீங்கனா…. ரூ.5க்கு மாஸ்க் கொடுப்போம்…. அதிரடி அறிவிப்பு …!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி மாவட்டத்திற்குள் இருந்த பேருந்து சேவை தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றது. போக்குவரத்துக் கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மாநிலத்துக்குள்  பேருந்து சேவை தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் சானிடைசர் பொருத்தப்பட்டிருக்கிறது.  நடத்துனருக்கும் முகக்கவசம் மற்றும் சீல்டு   வழங்கப்பட்டிருக்கிறது.

மாஸ்க் இல்லாமல் வரும் பயணிகளுக்கு ஐந்து ரூபாய்க்கு மாஸ்க்  கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. கரூர் மண்டலத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்குவது என்று முடிவெடுத்து அதற்கு உண்டான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்துள்ளார். தேவை இருக்கும் பொழுது தேவைப்பட்ட இடங்களில் பேருந்து சேவை அதிகப் படுத்த படும்.

Categories

Tech |