Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் படப்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூரையடுத்த உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |