Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதல்வரை வரவேற்ற பேனர் வைப்பதில் கோஷ்டி மோதல் – மக்கள் அதிருப்தி..!!

திருவண்ணாமலையில் நீதிமன்றம் உத்தரவுகளைமீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு பழனிசாமி வரும் 9-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறாதது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி 200 அடி உயரத்திற்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள் சரிந்து விழுந்தால் விபத்து நேரிடுமென பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |