Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த ரோகிங்யா முஸ்லிம்கள்…!!

உயிருக்கு அஞ்சி மியான்மரிலிருந்து தப்பி இந்தோனேஷியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

மியான்மர் நாட்டைச்சேர்ந்த சிறுபான்மை சமூக ரொஹிங்யா முஸ்லிம்கள், அந்நாட்டில் இன படுகொலை செய்யப்பட்டதாக 2017ம் ஆண்டு புகார் எழுந்ததால், இப்பிரச்சினை சர்வதேச அளவில் பெரிதாக உருவெடுத்தது. மியான்மரிலிருந்து கடல் வழியாக தப்பிய ரொஹிங்யா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு ஐனா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மியான்மரில் வாழ வழியில்லாமல் கள்ளத்தோனிமூலம் இந்தோனேசியாவுக்கு 300 பேர் பயணம் மேற்கொண்டனர். உஜாங்பிளாங் என்ற இடத்தில் கரையொதுங்கிய அவர்களை இந்தோனேசிய ராணுவம் பிடித்து முகாமில் அடைந்துள்ளது. 90 சதவிகிதம் புத்தமதத்தினரைக் கொண்ட மியான்மரில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு அச்சுறுத்தல் நீடித்து வருகிறது.

Categories

Tech |