ஆவடியில் மேஸ்திரி கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முன்விரோதம், தொழில் போட்டி ஆகிய காரணங்களால் நடைபெறும் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொலைகள் தொடர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ரவுடிகளுக்குள் சண்டை ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்கள் சில நேரங்களில் காவல்துறையினருக்கு தெரியவரும், போது அதனை தடுக்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் தற்போது குடும்பத்தில் நிகழும் சண்டைகளால் ஏற்படும் கொலைகள் முன்விரோதம் காரணமாக ஏற்படும் கொலைகளை காவல்துறையினர் வந்துத் தடுப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதேபோன்றுதான் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே கட்டிட மேஸ்திரியான மாரிமுத்து என்பவர் ஆவடி வெள்ளானூர் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கட்டிட பணிகளை மேற்கொள்ள பாபு, மோகன், பாட்ஷா, வெங்கடேசன் ஆகிய நான்கு பேருடன், அதே பகுதியில் ஒரு அறை எடுத்துதங்கி வேலை செய்து வந்தனர். ஒரு கட்டிடம் கட்டுவது தொடர்பாக எந்த வேலை வந்தாலும் மாரிமுத்து சகபணியாட்களான பாபு, மோகன், பாட்ஷா, வெங்கடேசன் ஆகியோரை அழைத்து சென்று வேலை வழங்குவது வாடிக்கையாக இருந்து வந்து. ஒரு கட்டத்தில் நண்பர்களாகவே பழகிவந்த நிலையில், ஏற்பட்ட பகையின் காரணமாக மணி அளவில் நான்கு பேர் சேர்ந்து மாரிமுத்துவை கல்லால் அடித்து கொலை செய்து தப்பியோடினர். பணிக்காக எப்போதும் ஒன்றாகவே இருந்துவந்த அவர்களுக்குள் எதனால் சண்டை வந்தது, மேஸ்திரி மாரிமுத்து எதற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.