சாத்தான்குளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பசும்பொன் தேவர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
சாத்தான்குளம் போலீசார் இளைஞர் ஒருவரை தாக்கி கொலை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்ட காரர்கள் கூறும் போது, சாத்தான்குளத்தில் இவ்வளவு பிரச்சனை நடந்திருந்ததையும் மீறி, அவர்களை சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் கூப்பிட்டு செல்லாமல் இல்லம் கூப்பிட்டுச்சென்று எஸ்ஐ ராஜா, இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், எஸ் பி சி டி சபாபதி சேர்ந்து அடித்துள்ளனர். நீதிபதியே இவர்கள் மனிதவுரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார். இன்றுவரை எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லையென்று கேள்வி எழுப்புகின்றனர். போலீசைை சஸ்பெண்ட் செய்யணும் இல்லையெனில் போராட்டத்தைத் தொடர்வோம் என்கின்றனர்.