தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்குகின்றது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறயுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை செவ்வாய் மாலையோடு முடிவடைந்த நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவினை வெப்கேம் மூலம் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் , 89 ஆயிரத்து 160 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப் _ படவுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மூன்று கட்டமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுவானது இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு _ ள்ளது. சித்திரைத் திருவிழா நடைபெறும் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இன்று இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்புப் பணியில் மட்டும் 14 ஆயிரத்து 400 துணை ராணுவப்படையினர், 63 ஆயிரத்து 951 காவல்துறையினர், 27 ஆயிரத்து 400 ரிசர்வ் காவல் படையினர், 13 ஆயிரத்து 882 ஊர்க்காவல் படையினர் மற்றும் 20 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.