Categories
தேசிய செய்திகள்

 இந்தியாவில் மட்டும் 43 லட்சம் … கொரோனாவிலிருந்து விடுபடுமா இந்தியா?…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடம் வகித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கண்டறிவதற்கு பரிசோதனைகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90,802 பேரிசை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,80,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,133 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,626 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 33,23,951 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8,83,697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |