Categories
தேசிய செய்திகள்

 இந்தியாவில் 5 கோடியை எட்டிய கொரோனா பரிசோதனை… மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…!!!

இந்தியாவில் கொரொனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான கொரோனா தொற்றுகள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடம் வகித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவலை கண்டறிவதற்கு பரிசோதனைகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,98,621 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதனால் தற்போது வரை இந்தியாவில் மொத்தமாக 5,06,50,128 சளி மாதிரிகள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.

Categories

Tech |