அமெரிக்க நீதித்துறையின் இரு சட்டங்கள் செயல்பட்டு கொண்டிருப்பதாக கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில் இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் தங்களுக்கு இரு சட்டங்கள் இருப்பதாக ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ” அமெரிக்க நீதித் துறையில் நிறவேறி உள்ளது. அமெரிக்காவில் தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் யதார்த்தம் பல தலைமுறைகள் கடந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்க நீதித் துறையில் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம் மற்றும் வெள்ளை இன மக்களுக்கு ஒரு சட்டம் என்று இருவேறு சட்டங்கள் இருக்கின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று அவர் கூறியுள்ளார்.