Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

GRM மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. வாக்குபதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்து கொண்டு இருக்கின்றனர்.

Categories

Tech |