உலகின் அடுத்த பெருந்தொற்றை சமாளிப்பதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்து வருகின்ற பெருந்தொற்றை சிறப்பாக சமாளிப்பதற்கு உலகம் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ” இந்த கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல. பெருந்தோட்ட நமது வாழ்வியலின் ஒரு அங்கம் என்பதை வரலாறு நமக்கு நன்றாக கற்றுக் கொடுத்துவிட்டது. இருந்தாலும் அடுத்து பெரும் தொற்று வருகின்ற நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பாக சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.