ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊரடங்கும் கட்டுப்பாட்டு ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகமாக பரவினால் எப்படி சமாளிப்பது? என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் மற்றும் காவல் துறையினரின் செயல்பாட்டால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு தமிழகம் முழுவதிலும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் அனைவரும் மினி கிளினிக்கில் இடம் பெறுவார்கள். தமிழகத்தின் அனைத்து நிறுவனங்களும் 100% திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வு களை பொதுமக்கள் மிக கவனமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.