Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (09-09-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

09-09-2020, ஆவணி 24, புதன்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.06 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

கிருத்திகை நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு ரோகிணி.

அமிர்தயோகம் பகல் 11.15 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

இன்றைய ராசிப்பலன் –  09.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் ஒற்றுமை குறைய நேரிடும். உத்தியோகத்தில் சோர்வு ஏற்படும். வீண் செலவுகளை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு சுப செய்தி வீடு தேடி வரும். பெரியவர்களின் அன்பை பெறுவீர். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்க ஆர்வம் கூடும். சேமிப்பு கேற்ற வருமானமும் பெருகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களால் மன உளைச்சல் ஏற்படும். வெளி பயணங்களால் தேவையற்ற டென்ஷன் குழப்பம் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைப்பதால் பண சிக்கல் அகலும். உத்தியோகத்தில் சிறிய மாறுதல் பெரிய லாபத்தை கொடுக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த முயற்சி எடுத்தாலும் அனுகூலம் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் நல்ல மதிப்பை பெறுவீர். உடன்பிறந்தவர்களால் நல்ல செய்தி வரும். புதிய பொருட்களை வாங்க விரும்புவீர்கள். தொழிலில் உடன் இருப்பவர்களிடம் ஒற்றுமை கூடும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு அலுவலகப் பணிகளில் ஆர்வமாக இருப்பீர். தொழில்ரீதியான எதிர்பார்த்திருக்கும் வங்கிக்கடன் எளிதில் பெற வாய்ப்பு. வெளிவட்டாரத் தொடர்பு நட்பு பெருகும். அரசு ரீதியில் எதிர்ப்பார்த்த உதவிகளை பெறுவீர். கடன் பிரச்சினைகள் அகலும். சிவ செய்திகள் கைகூடும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்வு நடைபெறும்.எந்த செயல் செய்தாலும் புதுப்பொலிவுடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய நபர்களிடம் நட்பு உண்டாகும். உத்தியோக சம்பந்தமான வெளிவட்டாரத் தொடர்பு பெருகும். அனுகூலம் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல் செய்தாலும் சற்று தாமதம் ஏற்படும்.உத்தியோக ரீதியான புதிய நிகழ்ச்சிகளை செய்யாமலிருப்பது நல்லது. வீட்டில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். தொழிலில் பொறுமையுடன் செயல்படுங்கள் அதுவே நல்லது.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சிவ செய்திகள் பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள். தெய்வீக காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதனால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடங்கல் ஆன அனைத்து விஷயங்களும் மீண்டும் தொடர வாய்ப்பு. உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர் ஆதரவாக இருப்பார். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வரவேண்டிய பழைய கடனில் சிறு தடங்கல் ஏற்படும். வாகன பழுது பார்ப்பதற்காக சிறு தொகை செலவாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோக ரீதியில் வெளி பயணங்களால் அனுகூலம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் சோர்வு காண்பீர். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உடனிரப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செய்தி ஏற்படும்.குழந்தைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகம் ரீதியில் புதிய முயற்சி வெற்றி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லக்கூடும். பழைய பாக்கி கடன்கள் வசூலாகும்.

Categories

Tech |