Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் உணவு விற்கும் தோணியில்….. “கஞ்சா விற்பனை” B.E பட்டதாரிகள் உட்பட 4 பேர் கைது….!!

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகம் செய்வது போன்று கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் மூலமாக உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக செம்மஞ்சேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் செம்மஞ்சேரி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் சோளிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே ஆப்லைன் உணவு வினியோகம் செய்யும் பின் தொடர்ந்து கண்காணித்து உள்ளனர். அப்போது தனியார் நிறுவன ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் 27 வயதுடைய விஜய் என்ற ஊழியர், தனது மோட்டார் சைக்கிளில் உணவு வினியோகம் செய்வது போன்று கஞ்சா மற்றும் சிகரெட் வைத்து உபயோகிக்கும் கஞ்சா ஆயில், சிரஞ்சி களும் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு விசாரணை நடத்தியதில், அதே குடியிருப்பு பகுதியில் தங்கியுள்ள திருப்பத்தூரை சேர்ந்த 26 வயதுடைய புகழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய அருண், சென்னை அண்ணாநகரை சேர்ந்த நவோதித்(24) ஆகிய மூவரும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஒன்றாக பயின்று பட்டதாரி படிப்பை முடித்துள்ளனர். அதன் பின்னர் புகழ் மற்றும் நவோதித் ஆகிய இருவரும் வேலை இல்லாமல் இருந்துள்ளனர். அருண் சென்னையில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர்கள் 3 பேரும் விலை உயர்ந்த கார் மூலமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்று கஞ்சா கடத்தி வந்த தனியார் ஆன்லைன் ஊழியர் விஜய் மூலமாக கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை விற்பனை செய்து வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே சமயத்தில் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அந்த கஞ்சாவை வினியோகம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா, 10 மில்லி லிட்டர் அளவுள்ள கஞ்சா ஆயில், 16 சிரஞ்சுகள், மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. நான்கு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |