Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயிர் காக்கும் சேவையில் முன்னேற்றம்…. சென்னையை தொடர்ந்து புதுக்கோட்டையில்….. மிக விரைவில் தொடக்கம்…..!!

புதுக்கோட்டையில் மக்களின் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் அமைக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த பயனுள்ளதாக இருந்து கொண்டிருக்கிறது. சுகாதாரத் துறையினர் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சேவையை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வாகம் செய்து வருகிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக 108 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் கேட்கப்பட்டு ஆம்புலன்ஸ் விரைந்து அப்பகுதிக்கு செல்லும். அந்த ஆம்புலன்ஸ் ஊழல் அருகில் இருக்கின்ற மருத்துவமனை அல்லது அதற்கான நிறுத்தும் இடத்தில் இருந்து அப்பகுதிக்கு சென்றடையும்.

அந்த தொலைபேசி சேவை மையமானது சென்னையில் மட்டும் தற்போது இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் 108 தொலைபேசி எண்ணிற்கு ஏராளமான அழைப்பிதழ் வந்து கொண்டிருப்பதால் கூடுதலாக புதுக்கோட்டையில் ஒரு தொலைபேசி சேவை மையம் அமைப்பதற்கு சுகாதார துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுப்பேட்டை பழைய ராணியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இதற்கான கட்டிடம் ஒன்று தயாராகி கொண்டிருக்கிறது. இந்த வயதில் பணியாற்றுவதற்கு வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சேவை மையத்தின் தொடக்க விழா விரைவில் தொடங்க இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டைக்கு வருகை தர இருக்கிறார். தற்போது இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் 108 தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தால் புதுக்கோட்டை சேவை மையத்திற்கு உடனடியாக அழைப்பு வந்து சேரும். இங்கே பணியில் இருப்பவர்களால் அழைப்பு விடுத்த அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு அனுப்பப்படும். அதே சமயத்தில் சென்னையில் இருக்கின்ற 108 தொலைபேசி சேவை மையமும் இயங்கிக் கொண்டிருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 24 என்ற விகிதத்தில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக அதி நவீன வசதிகள் கொண்ட 5 ஆம்புலன்ஸ்கள் தற்போது புதுக்கோட்டைக்கு வந்தடைந்துள்ளன. இவை நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சிலர் உடன் வந்திருந்தனர்.

Categories

Tech |