Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 9

செப்டம்பர் 9  கிரிகோரியன் ஆண்டு 252 ஆம் நாள்.

நெட்டாண்டு 253 ஆம் நாள்.

ஆண்டு முடிவு மேலும் 113  நாள்.

இன்றைய தின நிகழ்வுகள்

337 – முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது.

533 – 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர்.

1087 – வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.

1493 – உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

1513 – ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் யேம்சு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

1543 – மேரி ஸ்டுவர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது இசுக்காட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.

1739 – அமெரிக்கப் புரட்சிக்கு முன்னதாக பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களில் நிகழ்ந்த அடிமைகளின் கிளர்ச்சி தென் கரொலைனாவில் ஆரம்பமானது

1776 – அமெரிக்கக் காங்கிரசு அதன் மாநிலங்களின் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக அமெரிக்க ஐக்கிய நாடு எனப் பெயரிட்டது.

1791 – அரசுத்தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகருக்கு வாசிங்டன், டி. சி. எனப் பெயரிடப்பட்டது.

1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

1839 – ஜான் எர்செல் முதலாவது கண்ணாடித் தட்டு ஒளிப்படத்தை எடுத்தார்.

1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

1855 – கிரிமியப் போர்: செவஸ்தப்போல் நகரில் இருந்து உருசியப் படைகள் விலகின.

1892 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு வியாழனின் மூன்றாவது சந்திரன் அமல்தியாவைக் கண்டுபிடித்தார்.

1922 – கிரேக்க-துருக்கியப் போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1924 – அமெரிக்காவின் அவாயில், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1939 – பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பர்மிய தேசிய வீரர் ஊ ஒட்டாமா சிறையில் இறந்தார்.

1940 – வடக்கு டிரான்சில்வேனியாவை உருமேனியாவிடம் இருந்து அங்கேரிக்குக் கையளிக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கலவரங்களில் 93 உருமேனியரும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானம் ஒரிகனில் குண்டுகளை வீசியது.

1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத்-சார்பு அரசு பதவியேற்றது.

1945 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

1947 – முதல் தடவையாக மென்பொருள் வழு ஒன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கணினி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

1948 – கிம் இல்-சுங் கொரிய சனநாயக மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அமைத்தார்.

1954 – அல்சீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர்.

1965 – நியூ ஓர்லென்ஸ் அருகே பெட்சி சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்,

1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1970 – பிரித்தானிய விமானம் ஒன்று பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1971 – நியூயார்க்கில் அட்டிக்கா சிறைச்சாலையில் நான்கு-நாள் கலவரம் ஆரம்பமானது. இறுதியில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.

1993 – பலத்தீன விடுதலை இயக்கம் இசுரேலைத் தனிநாடாக அங்கீகரித்தது.

2001 – ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணித் அகமது சா மசூது இரண்டு அல் காயிதா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2004 – இந்தோனீசியா, ஜகார்த்தாவில் ஆத்திரேலியத் தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – பீகாரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2009 – துபை மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2012 – ஈராக்கில் இடம்பெற்ற பல்முனைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2015 – ஐக்கிய இராச்சியத்தில் அதிக காலத்துக்கு ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.

2016 – வட கொரியா தனது ஐந்தாவதும், மிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.

இன்றைய தின பிறப்புகள்

1789 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1859)

1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910)

1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1954)

1916 – ஏ. சேனாபதி கவுண்டர், தமிழக அரசியல்வாதி (இ. 1992)

1925 – இராம. வீரப்பன், தமிழக அரசியல்வாதி

1941 – தென்னிசு இரிட்சி, சி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2011)

1945 – அரசு மணிமேகலை, தமிழக எழுத்தாளர் (இ. 2001)

1949 – சுசீலோ பாம்பாங் யுதயோனோ, இந்தோனேசியாவின் 6வது அரசுத் தலைவர்

1953 – மஞ்சுளா, தென்னிந்திய நடிகை (இ, 2013)

1966 – ஆடம் சேண்ட்லர், அமெரிக்க நடிகர்

1967 – அக்‌ஷய் குமார், இந்திய நடிகர்

1968 – சாபாசு பட்டி, பாக்கித்தானிய அரசியல்வாதி (இ. 2011)

1991 – ஒஸ்கார், பிரேசில் கால்பந்தாட்ட வீரர்

இன்றைய தின இறப்புகள்

1087 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1028)

1569 – பீட்டர் புரூகல், டச்சு ஓவியர் (பி. 1525)

1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)

1976 – மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர், மெய்யியலாளர் (பி. 1893)

2000 – எர்பெர்ட் ஃபிரீடுமேன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1916)

2000 – வீராசாமி ரிங்காடு, மொரிசியசு ஆளுனர் (பி. 1920)

2003 – எட்வர்ட் டெல்லர், அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)

2005 – இளையபெருமாள், தமிழக அரசியல்வாதி (பி. 1924)

2011 – காந்திமதி, தமிழக நடிகை

2012 – சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்

2012 – வர்கீஸ் குரியன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1921)

2014 – பிரோசா பேகம், வங்காளதேசப் பாடகி (பி. 1930)

2015 – கே. குணரத்தினம், இலங்கைத் தமிழ் இயற்பியலாளர், கல்வியாளர் (பி. 1934)

இன்றைய தின சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (கோஸ்ட்டா ரிக்கா)

விடுதலை நாள் (வட கொரியா, 1948)

விடுதலை நாள் (தஜிகிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து 1991

Categories

Tech |