Categories
உலக செய்திகள்

‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி வெளியீடு… ரஷ்யா அதிகாரப்பூர்வ அறிக்கை…!!!

ரஷ்யா கண்டறிந்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டோம் என கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரஷ்யா அறிவித்தது. இருந்தாலும் அதன் பாதுகாப்பு அம்சம் பற்றிய பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். அதனால் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த கூடிய வகையில் தனது மகளுக்கு இந்த மருந்தினை செலுத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் கூறினார். ஆனால் ரஷ்ய தடுப்பூசியின் செயல்திறன் குறித்து நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் வி முதல் தொகுப்பு சிவில் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. தேவையான தகுதி சோதனைகள் வெற்றி கண்டதை தொடர்ந்து பொது பயன்பாட்டிற்கு தற்போது விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பிராந்திய பகுதிகளுக்கு மிக விரைவில் இந்த மருந்துகளின் முதல் தொகுப்பு கிடைத்துவிடும்” என்று கூறியுள்ளது.

Categories

Tech |