திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் அந்த நடிகை என்பதனால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் சினிமா திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற பல மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் அந்த நடிகை நடிப்பதால் இந்த படத்தை விட்டே வெளியேறி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான அவர் கூறிய பதிவில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக படத்தில் நடிக்க இருப்பதால் நான் அதை மறுத்துவிட்டேன். எனது இந்த நிலையை தயாரிப்பாளர்களுடன் ஆலோசித்து விளக்கியுள்ளேன். நான் கூறிய கருத்தை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இதன்பிறகு அவர்களும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என தெரியப்படுத்தி இருக்கிறார். பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் பாலிவுட் திரையுலகில் முன்னணி வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் தொடங்கியது. இதனையடுத்து போதைப்பழக்கம் உள்ளிட்டவைகள் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வாரிசு நடிகர்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசார் இவர்களுக்கு ஆதரவாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பல வகையில் எதிர்ப்புகள் வருகின்றன.