கொரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்க்கொல்கிறார் .
கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது . தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது வரை 19 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலர்வர் 20 வது மாவட்டமாக இன்று திருவண்ணாமலைக்கு சென்று கலெக்டருடன் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துரையாடினார்.
அதை தொடந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள் உடன் ஆலோசனை பேசிய முதல்வர் , முடிவற்ற திட்ட பணிகளை திறக்கிறார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் , மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதையடுத்து மதியம் விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்று கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு செல்ல இருக்கிறார் .
மேலும் 11ஆம் தேதி காஞ்சிபுரம், 21ம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர், 22ஆம் தேதி தூத்துக்குடி ,ராமநாதபுரம், 23ம் தேதி சிவகங்கை, கரூர் 25ஆம் தேதி புதுக்கோட்டை, 26 ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறார்.இம்மாத இறுதிக்குள் 12 மாவட்டங்கள் பயணம் மேற்கொள்கிறார் அதற்கான 21 பயணத் திட்டம் தற்காலிகமாக வெளியாகியுள்ளது.