பிரபல சீரியல் நடிகை தற்கொலை செய்து இறந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இந்தியர்களின் தரவுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்க்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மத்திய அரசு டிக் டாக் செயலியை தடை செய்வதற்கு முன்பு வரை அந்த செயலியானது தமிழகத்தில் பலரது குடும்பங்களை சீரழித்தும், பலரது உயிர்களை பலி வாங்கியும் உள்ளது. அந்த வகையில் மௌனராகம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரவாணி கொண்டபல்லி இன்று அவரது கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நடிகை ஸ்ரவாணிக்கு டிக்டாக் மூலம் அறிமுகமான தேவராஜ் என்பவர் அவரிடம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தொடர்ந்து பணம் கேட்டு துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.